இலங்கையின் சட்டத்தை இந்தியாவால் மாற்ற முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்

இலங்கையின் சட்டத்தை இந்தியாவால் மாற்ற முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்

எழுத்தாளர் Staff Writer

21 Oct, 2015 | 7:25 am

இலங்கையின் சட்டத்தை இந்தியாவால் மாற்ற முடியாது என பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிப்பதாலேயே கடற்படையினரால் கைது செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காஞ்சிபுரம் செங்கல்பட்டில் நடைபெற்ற பாரதீய ஜனதாக் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே தமிழிசை சவுந்தரராஜன் இதனைக் கூறியதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் நிலைமையை மாற்றும் முயற்சிகளை இந்திய மத்திய அரசாங்கம் மேற்கொண்டுவருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்