அவன்ற் கார்ட் விசாரணைக்கு பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட வேண்டும் – அனுரகுமார திசாநாயக்க

அவன்ற் கார்ட் விசாரணைக்கு பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட வேண்டும் – அனுரகுமார திசாநாயக்க

எழுத்தாளர் Bella Dalima

21 Oct, 2015 | 3:27 pm

அவன்ற் கார்ட் (Avant Garde) சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதம கொரடா அனுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அவன்ற் கார்ட் நிறுவனம் தொடர்பில் நிதித் தூய்தாக்கல் உள்ளிட்ட விடயங்கள் சிலவற்றின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டினார்.

அவன்ற் கார்ட் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் பின்னரே அனுரகுமார திசாநாயக்க பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இதனையடுத்து, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தவறாகக் குறிப்பிட்டமை தொடர்பில் தெளிவுபடுத்தும் சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட அமளியால் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்