பிரகீத் எக்னெலிகொட காணாமற்போனமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு

பிரகீத் எக்னெலிகொட காணாமற்போனமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2015 | 6:48 pm

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போனமை தொடர்பிலான வழக்கில் இராணுவ தளபதி மற்றும் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஆகியோரை வழக்கின் ஒரு தரப்பாக குறிப்பிட மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஊடவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பில் அவரது மனைவி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

தற்போதைய இராணுவ தளபதி மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் பிரதானி ஆகியோரை இந்த வழக்கின் ஒரு தரப்பாக பெயரிடுமாறு இதன் போது எக்னெலிகொட சார்பில் ஆஜரான சட்டதரணிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

விடயங்களை ஆராய்ந்த பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட மற்றும் எப்.சீ.ஜே. மடவல ஆகியோர் இதற்கு அனுமதி வழங்கினர்.

தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள் குறிப்பிடுகின்ற நபர்களை ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு இதன் போது எக்னெலிகொட தரப்பு சட்டதரணிகள் கேட்டுக்கொண்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்