தமிழினியின் பூதவுடல் பரந்தனிலுள்ள அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது

தமிழினியின் பூதவுடல் பரந்தனிலுள்ள அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2015 | 7:26 pm

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் பிரிவின் மகளிர் அணித் தலைவியாக செயற்பட்ட தமிழினி என்று அழைக்கப்பட்ட சுப்ரமணியம் சிவகாமியின் பூதவுடல் பரந்தனில் உள்ள அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மஹரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் நேற்று (18) அதிகாலை காலமானார்.

அன்னாரின் பூதவுடல் நேற்று முற்பகல் அவரின் கணவரால் பொறுப்பேற்கப்பட்டு, பரந்தனுக்கு கொண்டு செல்லப்பட்டது .

தமிழினியின் பூதவுடல் பரந்தனில் உள்ள அவரின் இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் நாளை இடம் பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்