சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2015 | 7:31 pm

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக சில பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் சந்தி​வெளி களப்புப் பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருவர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளனர்.

இன்று (19) அதிகாலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக பொலிஸார் கூறினார்.

சந்திவெளி, கிளிவெட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 27 மற்றும் 37 வயதான இருவரே இதன்போது உயிரிழந்துள்ளனர்.

இந்த இரண்டு உயிரிழ்ப்புக்களுடன் இந்த வருடத்தில் மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பிரதேச சபைக்கு உட்பட்ட சுமார் 10 குடும்பத்தை சேர்ந்தவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

யட்டியாந்தோட்டை பிரதேசத்தில் தொடரும் மழை காரணமாக நேற்றிரவு வௌ்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது

இந்த அனர்த்தத்தினால் 3 வீடுகள் வௌ்ளத்தில் மூழ்கியதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

தொடரும் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் 2 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இன்று (19) காலை சம்பவ இடத்திற்கு சென்ற பிரதேச செயலாளர் குறித்த பகுதியில் வசிக்கும் சுமார் 10 குடும்பங்களை சேர்ந்த 60 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதே வேளை லிந்துலை – தலங்கந்த தோட்ட பகுதியில் இன்று ஏற்பட்ட மண்சரிவில் 2 வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கபட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்படுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதே வேளை புத்தளம் மாவட்டத்தில் தொடரும் மழையினால் புத்தளம்-மன்னார் பிரதான வீதியூடான போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

கலா ஓயா பெருக்தெடுத்துள்ள நிலையில் கங்கேவாடிப் பகுதியிலுள்ள பாலத்தின் ஊடாக சுமார் 12 அடிக்கு மேல் வெள்ள நீர் பாய்வதனால் இந்த நிலமை ஏற்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்