சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் மகளிர் குற்றங்கள் தொடர்பான ஆயிரக்கணக்கான வழக்குகள்

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் மகளிர் குற்றங்கள் தொடர்பான ஆயிரக்கணக்கான வழக்குகள்

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் மகளிர் குற்றங்கள் தொடர்பான ஆயிரக்கணக்கான வழக்குகள்

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2015 | 11:23 am

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் மகளிர் குற்றங்கள் தொடர்பான ஆயிரக்கணக்கான வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் குவிந்துள்ளதாக நீதியமைச்சு தெரிவிக்கின்றது.

அவ்வாறான வழக்குகளின் விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

குற்றவியல் வழக்குகள் தொடர்பில் அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னரே இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளை துரிதப்படுத்துவது தொடர்பில் சட்டமறுசீரமைப்புக்களை கொண்டு வரவுள்ளதாகவும் நீதிமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டின் நீதிமன்றக் கட்டமைப்பை மேலும் செயற்திறன் மிக்கதாய் மாற்றுவது தொடர்பில் நீதிச் சேவை ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்