கொண்டயா விடுதலை

கொண்டயா விடுதலை

கொண்டயா விடுதலை

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2015 | 10:40 am

கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியஷாந்தவை சிறுமி சேயா கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்வதற்கு மினுவன்கொட நீதவான் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது

சிறுமி சேயாவின் கொலைக்கும் கொண்டயாவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென குற்ற விசாரணைப் பிரிவினர் இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்ததையடுத்தே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்

கொண்டயா எனப்படும் பிரியஷாந்த மற்றும் அவரது சகோதரரான சமன்ஜயலத் ஆகியோல் பலத்த பொலிஸ் பாதுகாப்புடனேயே நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து மினுவங்கொட நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்

இருப்பினும் வேறு சில சம்பவங்கள் தொடர்பில் கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியஷாந்த​வை தமக்கு விசாரணைக்குட்படுத்த வேண்டியுள்ளதாக கம்பஹா மற்றும் வேயாங்கொடை பொலிஸார் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்

இதனையடுத்து நீதவானின் உத்தரவிற்கமைய கொண்டயா மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

அத்துடன் எதிர்வரும் 20 ஆம் திகதி கொண்டயாவை அத்தனகல்ல நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறும் 21 ஆம் திகதி கம்பஹா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறும் மினுவாங்கொடை நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்