கடும் மழை காரணமாக 10 மாவட்டங்களுக்கு ​தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

கடும் மழை காரணமாக 10 மாவட்டங்களுக்கு ​தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2015 | 8:50 am

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண் சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இன்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கண்டி, மாத்தளை, நுவெரெலியா, பதுளை, கேகாலை, இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை, காலி மற்றும் மாத்தறை ஆகிய 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தென்மேற்குப் பகுதியை பாதித்துள்ள சீரற்ற வானிலை காரணமாக இரண்டு கங்கைகளின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது.

நில்வலா கங்கை பெருக்கெடுத்தமையினால் பிடபெத்தர பகுதியில் இருந்து தாழ் நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

கிங்கங்கை பெருக்கெடுத்தமையினால் காலி, உடுகம – நெலுவ பிரதான வீதியின் மஹபோதிவத்த பிரதேசம் நீரில் மூழ்கியதுடன், இன்று முற்பகல் அந்த வீதியூடான போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டது.

அத்துடன் உடகம, பனன்கல, கல்லன்தல உள்ளிட்ட பகுதிகளிலும் தாழ் நிலப்பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கின.

காலி,கினிதும, நெலுவ பிரதான வீதியின் கினிதும நகரிற்கு அருகில் உள்ள பாலம் ஒன்று உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

நில்வலா கங்கை பெருக்கெடுத்தமையினால் அகுரஸ்ஸ மற்றும் அதனை அண்மித்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அகுரஸ்ஸ பிரதேசத்தில் பிரதான மற்றும் பல குறுக்கு வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதேவேளை புத்தளம் மாவட்டத்தில் தொடரும் மழையினால் புத்தளம்-மன்னார் பிரதான வீதியூடான போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

கலா ஓயா பெருக்தெடுத்துள்ள நிலையில் கங்கேவாடிப் பகுதியிலுள்ள பாலத்தின் ஊடாக சுமார் 12 அடி வெள்ள நீர் பாய்வதனால் இந்த நிலமை ஏற்பட்டுள்ளது.

பிடபெத்த கொரகவெல பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண் சரிந்து வீழ்ந்தமையினால் அந்த வீட்டுக்கு சேதம் ஏற்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்