ஏறாவூரில் மின்னல் தாக்கியதால் இருவர் பலி

ஏறாவூரில் மின்னல் தாக்கியதால் இருவர் பலி

ஏறாவூரில் மின்னல் தாக்கியதால் இருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2015 | 7:50 am

ஏறாவூர் சந்திவௌி களப்புப் பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டிக் கொண்டிருந்த இருவர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை வேளையிலேயே குறித்த நபர்கள் இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் கூறினார்.

சந்திவௌி கிளிவெட்டி பிரதேசத்தில் வசிக்கும் 27 மற்றும் 37 வயதான இரு நபர்களே உயிரிழந்துள்ளனர்.

இந்த இரண்டு உயிரிழ்ப்புக்களுடன் இந்த வருடத்தில் மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்