“எமது பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக” விழிப்புணர்வுத் திட்டம் இன்று கம்பஹா மற்றும் கடவத்தையில்

“எமது பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக” விழிப்புணர்வுத் திட்டம் இன்று கம்பஹா மற்றும் கடவத்தையில்

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2015 | 7:10 pm

சிறுவர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு நியூஸ்பெஸ்ட் முன்னெடுத்துள்ள “எமது பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக” விழிப்புணர்வுத் திட்டம் இன்று (19) கம்பஹா மற்றும் கடவத்தை ஆகிய பகுதியில் முன்னெடுக்கப்பட்டன.

சிறுவர்களின் எதிர்கால பாதுகாப்பிற்காக நியூஸ்பெஸ்ட், சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சுடன் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

கம்பஹா நகரில் ஒன்று கூடிய அதிகளவிலான மக்களின் பங்களிப்புடன் “எமது பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக” விழிப்புணர்வுத் திட்டம் ஆரம்பமானது.

அதன் பின்னர் ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்து பேரணி ஆரம்பமானது.

சிறுவர்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு இடம்பெறும் இந்த விழிப்புணர்வுத் திட்டத்துடன் பல அமைப்புகளும் எம்முடன் இணைந்து கொண்டுள்ளன.

பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகளும் இன்று தெளிவூட்டல் நடவடிக்கையில் இணைந்து கொண்டிருந்தனர்.

கடவத்தை பொலிஸ் நிலையத்தின் பூரண ஒத்துழைப்புடன் கடவத்தை நகரிலும் விழிப்புணர்வுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் மக்கள் பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்