இலங்கை விமானப்படை நாட்டிற்கு ஆற்றிய சேவையை குறைத்து மதிப்பிட முடியாது -ஜனாதிபதி

இலங்கை விமானப்படை நாட்டிற்கு ஆற்றிய சேவையை குறைத்து மதிப்பிட முடியாது -ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2015 | 6:24 pm

தேசிய பாதுகாப்பிற்காக கடந்த தசாப்த்தங்களில் இலங்கை விமானப்படை நாட்டிற்கு ஆற்றிய சேவையை குறைத்து மதிப்பிட முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

திருகோணமலை விமானப்படை தளத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

விமானப்படை தளத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதியை உயர் நிலை அதிகாரிகள் சம்பிரதாயப்பூர்வமாக வரவேற்றனர்.

இதன் போது கெடட் மற்றும் மகளிர் படையின் அதிகாரிகளுக்கு பதவி நிலை உயர்வுகளும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் கற்கை நெறிகளை நிறைவு செய்த அதிகாரிகளுக்கு உத்தியோகப்பூர்வ சின்னங்களும் ஜனாதிபதியினால் அணிவிக்கப்பட்டன.

இதேவேளை , பயிற்சிகளை நிறைவு செய்த விமானப்படையின் மகளிர் பிரிவினர் மற்றும் சிப்பாய்கள் 594 பேர் கடமைக்கு திரும்பினர்.

இதன் போது இலங்கை விமானப்படையின் விஷேட நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்