அவன்காட் கப்பலின் கொள்கலன்களுக்கு சீல் வைப்பதற்கு நடவடிக்கை

அவன்காட் கப்பலின் கொள்கலன்களுக்கு சீல் வைப்பதற்கு நடவடிக்கை

அவன்காட் கப்பலின் கொள்கலன்களுக்கு சீல் வைப்பதற்கு நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2015 | 8:20 am

காலி துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அவன்காட் கப்பலின் ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் களஞ்சியப்படுத்தப்பட்ட 04 கொள்கலன்களுக்கு சீல் வைப்பதற்கு நடவடிக்கையெடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தற்போது கடற்படையினர் மற்றும் காலி துறைமுக பொலிஸார் இணைந்து குறித்த கப்பலுக்கு பாதுகாப்பளித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியகட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

நேற்று முன் தினம் குற்ற விசாரணைப் பிரிவினர் அவன் கார்ட் ஆயுதக் கப்பலில் தமது சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

காலி நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியுடனேயே குற்றவிசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

தடுத்துவைக்கப்பட்டுள்ள அவன் கார்ட் ஆயுதக் கப்பல் தொடர்பில் குற்றவிசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்