அடுத்த மாதத்திலிருந்து ரயிலில் பிச்சை எடுப்பதற்கு தடை

அடுத்த மாதத்திலிருந்து ரயிலில் பிச்சை எடுப்பதற்கு தடை

அடுத்த மாதத்திலிருந்து ரயிலில் பிச்சை எடுப்பதற்கு தடை

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2015 | 11:52 am

அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து ரயிலில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.

ரயில் பிச்சை எடுப்பவர்கள் மற்றும் வழிப்பறி கொள்ளையர்களினால் பயணிகள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ரயில்வே கட்டளைச்சட்டத்தில் பிச்சையெடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் குறித்த சட்டம் நடைமுறைப்படுத்தவில்லை என ரயில்வே திணைக்களத்தின் பொறுப்பதிகாரி கூறினார்.

அண்மைக்காலமாக பிச்சைக்காரர்கள் சிலர் குற்றச்செயல்களுக்கு உதவி புரிவது நிரூபணமாகியுள்ளதால் இந்த சட்ட நடைமுறைப்படுத்த தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் இத்தடையை மீறி ரயிலில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிடுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்