முன்னாள் இராஜாங்க அமைச்சர் வேலாயுதம் அவர்களின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வேலாயுதம் அவர்களின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை

எழுத்தாளர் Staff Writer

16 Oct, 2015 | 12:32 pm

முன்னாள் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சரான காலஞ்சென்ற கே. வேலாயுதம் அவர்களின் பூதவுடல் பதுளையில் உள்ள அன்னாரின் வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை பசறையில் நடைபெறவுள்ளன.

இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. வேலாயுதம் சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை இயற்கை எய்தினார்.

அன்னாரின் பூதவுடலுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

எதிர்வரும் சனிக்கிழமை மாலை 2.30 மணியளவில் பசறை பிரதேச சபை மைதானத்தில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்