முன்னாள் அணித்தலைவர் என்னை ஆட்டநிர்ணயத்தில் ஈடுபடுமாறு கோரினார் – மக்கலம்

முன்னாள் அணித்தலைவர் என்னை ஆட்டநிர்ணயத்தில் ஈடுபடுமாறு கோரினார் – மக்கலம்

முன்னாள் அணித்தலைவர் என்னை ஆட்டநிர்ணயத்தில் ஈடுபடுமாறு கோரினார் – மக்கலம்

எழுத்தாளர் Staff Writer

16 Oct, 2015 | 11:53 am

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் க்ரிஸ் கெயான்ஸ் ஆட்டநிர்ணயத்தில் ஈடுபடுகின்றமை தொடர்பான யோசனையை முன்வைத்தாதாக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் ப்ரன்டன் மக்கலம் தெரிவித்தார்.

2012 ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டமை தொடர்பான விசாரணைகள் இங்கிலாந்து லண்டன் சவுத்வர்க் க்ரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகின்றன.

இவ்வாறு ஆட்டநிர்ணயத்தில் குற்றச்சாட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் க்ரிஸ் கெயன்ஸூம் உள்ளடங்குகின்றார்.

இதற்கு சாட்சியமளிக்கும் பொருட்டு நியூசிலாந்து அணியின் தலைவர் ப்ரன்டன் மக்கலம் நேற்று (15) விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.

2008 ஆம் ஆண்டு இந்திய – கொல்கத்தாவிலுள்ள ஹோட்டலொன்றில் ஆட்டநிர்ணயத்தில் ஈடுபடுகின்றமை தொடர்பான யோசணையை க்ரிஸ் கெயன்ஸ் தனக்கு முன்வைத்தாக நீதிமன்றில் மக்கலம் தெரிவித்தார்.

ஆட்டநிர்ணயத்தில் ஈடுபடுகின்றமை தொடர்பில் கெயான்ஸ், மக்கலத்திற்கு மூன்று சந்தர்ப்பங்களில் யோசனை முன்வைத்திருந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்