பதுளையில்  போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

பதுளையில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

பதுளையில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

16 Oct, 2015 | 8:39 am

5000 ரூபா பெறுமதியுடைய 71 போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் பதுளை நகரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிடைத்த தகவலொன்றின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் மூலம் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

சந்தேகநபரிடமிருந்து 100 அமெரிக்க டொலர் பெறுமதியுடைய 20 நாணயத்தாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தப் போலி நாணயத்தாள்களுடன் 48 வயதான ராகல பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்