நான்கு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நான்கு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நான்கு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

16 Oct, 2015 | 6:39 am

நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

பதுளை,நுவரெலியா, கேகாலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார தெரிவித்தார்.

இந்த மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (16) பிற்பகல் 7 மணிவரை நீடிக்கப்படுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ச்சியா பெய்துவரும் மழை காரணமாக மண்சரி ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும், மண்சரிவு சம்பவங்கள் சில பதிவாகியுள்ளதாகவும் தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்