தமிழ் கைதிகள் ஐந்தாவது நாளகாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில்

தமிழ் கைதிகள் ஐந்தாவது நாளகாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில்

தமிழ் கைதிகள் ஐந்தாவது நாளகாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில்

எழுத்தாளர் Staff Writer

16 Oct, 2015 | 1:00 pm

தமிழ் கைதிகள் ஐந்தாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் பரிசோதனைகளுக்காக இன்று (16) வைத்தியரிடம் கொண்டுசெல்லப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

கொழும்பு மகசீன், அநுராதபுர, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய சிறைச்சாலைகளிலுள்ள 201 தமிழ் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழ் கைதிகளின் போராட்டத்திற்கு வலுவூட்டும் வகையில் யாழ்ப்பாணம் முன்னீஸ்வரர் கோயிலுக்கு முன்னால் இன்று (16) காலை உண்ணாவிரதப் போராட்டமொன்று ஆரம்பமானது.

தமிழ் அரசியல் கட்சிகள், காணாமற்போனோரின் உறவினர்கள், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், மத குருமார்கள் என பல்வேறு தரப்பினர் இதில் கலந்துகொண்டனர்.

தமிழ் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்பதே இவர்கள் அனைவருனிதும் ஏகோபித்த குரலாக அமைந்தது.

இதேவேளை வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றுமொரு அடையாள உண்ணாவிரதப் போராட்டம் வவுனியா நகர சபை முன்றலில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் கைதிகளின் விடுதலையே நாட்டிலுள்ள பலரின் தற்போதைய எதிர்பார்ப்பாகவுள்ளது.

அதற்காக பல்வேறு தரப்பினர் தமக்கு இயன்ற ஒத்துழைப்புக்களை வழங்கியவண்ணம் உள்ளனர்.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் தமிழ் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பழைய மாவட்ட செயலக முன்றலில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்