தமிழ் கைதிகளை தீபாவளிக்கு முன்னர் விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் இந்து மாமன்றம் கோரிக்கை

தமிழ் கைதிகளை தீபாவளிக்கு முன்னர் விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் இந்து மாமன்றம் கோரிக்கை

தமிழ் கைதிகளை தீபாவளிக்கு முன்னர் விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் இந்து மாமன்றம் கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

16 Oct, 2015 | 1:05 pm

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை எதிர்வரும் தீபாவளிக்கு முன்னர் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் அகில இலங்கை இந்து மாமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஜனவரி 10 ஆம் திகதி இந்த நாட்டின் அனைத்து இந்துக்கள் சார்பாக ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்த வாழ்த்து கடித்த்தில்கூட தமிழ் கைதிகளின் விடயத்தை எடுத்து கூறியிருந்த்தாக அகில இலஙகை இந்து மாமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ள கடித்த்தில் இந்து மாமன்றம் இந்த விடயங்களை கூறியுள்ளது.

வற்புறுத்தலின் பேரில் ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதற்கு தம்மை நிர்ப்பந்தித்ததாக இந்து மதகுரு ஒருவர் கூறியிருந்த நிலையிலும் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த்தாகவும் அகில இலங்கை இந்து மாமன்றம் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

இதுதொடர்பில் 2002 ஆம் ஆண்டில் சட்டவைத்திய அதிகாரியினால் வழங்கப்பட்ட அறிக்கையின் பிரதியொன்றையும் இணைத்துள்ளதாக தெரிவித்துள்ள இந்து மாமன்றம், அந்த மதகுரு தடுப்புக் காவலில் இருந்தபோது மனிதாபிமானமற்ற முறையில் எவ்வாறு தாக்கப்பட்டார் என்பதை அது எடுத்துக் காட்டுவதாகவும் சுட்டிக்காடியுள்ளது.

அந்த வகையில் இந்து மதகுருமார் விடயத்தில் கருணை காட்டப்படவேண்டும் என்பதுடன், ஏனைய கைதிகளும் நீதி மற்றும் நியாயமான முறையில் நடத்தப்படவேண்டுமென அகில இலங்கை இந்து மாமன்றம் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடித்த்தில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்