கெப்பிட்டல் மகாராஜா நிறுவன குழுமப் பணிப்பாளரின் நெறிப்படுத்தலில் சர்வதேச மனிதாபிமான  மாநாடு

கெப்பிட்டல் மகாராஜா நிறுவன குழுமப் பணிப்பாளரின் நெறிப்படுத்தலில் சர்வதேச மனிதாபிமான  மாநாடு

எழுத்தாளர் Bella Dalima

16 Oct, 2015 | 10:13 pm

உலகின் பல்வேறு தரப்புகளை பிரதிநிதித்துவம் செய்து சுமார் 900 பேர் கலந்துகொண்டுள்ள சர்வதேச மனிதாபிமான விவகாரங்கள் தொடர்பான மாநாடு இன்றும் சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்றது.

இந்த மாநாட்டின் இறுதி அறிக்கை 2016 ஆம் ஆண்டு துருக்கியில் இடம்பெறவுள்ள உலக மனிதாபிமான மாநாட்டில் சமர்பிக்கப்படவுள்ளது.

மனிதாபிமானம் தொடர்பில் கலந்துரையாடுவதே இதன் நோக்கமாகும்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அழைப்பு ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்பு அலுவலகத்தினால், கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்திற்கு விடுக்கப்பட்டிருந்தது.

சர்வதேச மனிதாபிமான விவகாரங்கள் தொடர்பான மாநாட்டை இன்று கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டேனியல் நெறிப்படுத்தினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்