மதவாச்சியில் கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் 7 பேர் கைது

மதவாச்சியில் கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் 7 பேர் கைது

மதவாச்சியில் கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் 7 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

11 Oct, 2015 | 11:13 am

மதவாச்சி, இக்கிரிகொல்லேவ பகுதியில் காசோலை மோசடியில் ஈடுபட்ட சம்பவம் மற்றும் தாக்குதல் மேற்கொண்டமை போன்ற குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் பல கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புபட்டிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்கள் 23 மற்றும் 41 வயதுகளையுடயவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்களிடமிருந்து கைக்குண்டுகள் ,கூரிய ஆயுதங்கள் உட்பட சட்டவிரோதமான பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்