பண மோசடியில் ஈடுபட்ட சிறைச்சாலை அதிகாரி கைது

பண மோசடியில் ஈடுபட்ட சிறைச்சாலை அதிகாரி கைது

பண மோசடியில் ஈடுபட்ட சிறைச்சாலை அதிகாரி கைது

எழுத்தாளர் Staff Writer

11 Oct, 2015 | 11:46 am

குற்றத்தடுப்புப் பிரிவினர் என்று ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட சிறைச்சாலை அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடவத்தை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கிரில்லவல பகுதியை வதிவிடமாகக் கொண்ட ஒருவரது தொலைபேசிக்கு அழைப்பினை மேற்கொண்டு சந்தேகநபர் அச்சுறுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

குறித்த நபர் 5 வருடங்களுக்கு முன்னர் விற்பனை செய்த முச்சக்கர வண்டி போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்துள்ளதாகவும் அது குறித்து விசாரணை நடத்த வேண்டுமெனவும் சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணையை நிறுத்துவதற்கு 25,000 ரூபாவை தனியார் வங்கிக் கணக்கொன்றில் வைப்பிலிடுமாறு குறித்த நபருக்கு சந்தேகநபர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

அதன் பின்னர் அவர் கடவத்தை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கட்டுள்ளன.

குறித்த நபரின் தொலைபேசிக்கு வந்த அழைப்பின் இலக்கத்தை பரீட்சித்ததில், சந்தேகநபர் சிறைச்சாலை அதிகாரியென கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேநபர் கடவத்தை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று (11) ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்