சம்மாந்துறையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சம்மாந்துறையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சம்மாந்துறையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Oct, 2015 | 11:30 am

சம்மாந்துறை, மாவடிப்பள்ளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

25 வயதுடைய மாவடிப்பள்ளி பகுதியை சேரந்த ஒருவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (10) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அம்பாறை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் எதிர்த்திசையில் வந்த லொறியில் மோதியதிலேயே மோட்டார் சைக்களில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சடலம் மீதான பிரேதப் பரிசோதனை இன்று (11) முன்னெடுக்கப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் சம்மாந்துறை பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்