க.பொ.த உயர்தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் நாளை ஆரம்பம்

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் நாளை ஆரம்பம்

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் நாளை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

11 Oct, 2015 | 4:16 pm

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் நாளை (11) ஆரம்பமாகவுள்ளன.

மனையியல், நடனம், நாடகமும் அரங்கியலும், சங்கீதம் ஆகிய பாடங்களுக்கு அமைவான செயன்முறை பரீட்சைகளே நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பரீட்சார்த்திகள் அனுமதிப் பத்திரங்களை பாடசாலை அதிபர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இந்த பரீட்சைகள் தொடர்பிலான தகவல்களை 0112 784 208 அல்லது 0112 784 537 மற்றும் 0113 188 350 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்