கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம்

கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம்

கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம்

எழுத்தாளர் Staff Writer

11 Oct, 2015 | 12:59 pm

கொழும்பு மாநகரில் விசேட போக்குவரத்துத் திட்டம் நாளை (12) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு நகரில் காணப்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தவே இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பான ஒத்திகை நடவடிக்கையொன்று இன்று (11) கொழும்பு மற்றும் மஹரகம பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 7.30 மணிமுதல் 8.45 வரை இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியகட்சகருமான ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சந்தியிலிருந்து ஆயுர்வேத சந்தி வரையிலும் மற்றும் தேவிபாலிகா வித்தியாலயத்திலத்திற்கு அருகிலிருந்து தாமரைத் தடாக அரங்க வரையான வீதிகளில் விசேட போக்குவரத்துத்  திட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

நாளை முதல் காலை 7.30 முதல் 8.45 வரை கொழும்பில் இந்த விசேடப் போக்குவரத்துத் திட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்