கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கைது

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கைது

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கைது

எழுத்தாளர் Staff Writer

11 Oct, 2015 | 6:58 pm

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று மாலை கைது செய்துள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது

இந்த கொலை சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய மாகாண சபை உறுப்பினருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினரிடம் விசாரணை நடத்திவருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்