இன்று பெண் பிள்ளைகள் தொடர்பான சர்வதேச தினம்

இன்று பெண் பிள்ளைகள் தொடர்பான சர்வதேச தினம்

இன்று பெண் பிள்ளைகள் தொடர்பான சர்வதேச தினம்

எழுத்தாளர் Staff Writer

11 Oct, 2015 | 9:18 am

உலகளாவிய ரீதியல் உள்ள பெண் பிள்ளைகள் எதிர்நோக்கும் சவால்களை அடையாளங்காணும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை 2011 ஆம் ஆண்டு இந்தத் தினத்தை பிரகடனப்படுத்தியது.

பெண்பிள்ளைகளுக்கு தேவையான பாதுகாப்பு, கல்வி ,சுகாதாரமான வாழ்க்கையினை முன்னெடுப்பதற்கான உரிமையினை பாதுகாப்பது தொடர்பில் சர்வதேசம் அவதானம் செலுத்த வேண்டும் என்பதே இத்தினம் பிரகடனப்படுத்தப்பட்டதன் முக்கிய நோக்கமாக விளங்குகின்றது.

உலகம் முழுவதும் உள்ள பெண் பிள்ளைகள் மற்றும் மகளிரின் வாழ்வினை மேம்படுத்துவதே ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான இலக்காகும் என இத்தினத்தை முன்னிட்டு ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறுமை, வன்முறை மற்றும் சமூகத்தால் ஒடுக்கப்படுதல் போன்ற செயற்பாடுகளிலிருந்து அவர்களை பாதுகாத்து கௌரவமான வாழ்க்கையினை வழங்க வேண்டியது அனைவரினதும் கடமையாகும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘புதல்வியே நீரே நம் இளைய தலைமுறையின் பலம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கையில் இம்முறை பெண் பிள்ளைகளுக்கான சர்வதேச தினம் கொண்டாடப்படுகின்றது.

பெண் பிள்ளைகள் என்ற காரணத்தினால் ஆசியாவில் உள்ள பிள்ளைகள் பல சவால்களுக்கு முகங்கொடுப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஊடக அதிகாரி குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்