சேயா சதெவ்மியின் தந்தையை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

சேயா சதெவ்மியின் தந்தையை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

08 Oct, 2015 | 8:19 pm

சிறுமி சேயா சதெவ்மியின் கொலை தொடர்பில் அவரது தந்தையை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வேண்டுகோள் குறித்து சேயா சதெவ்மியின் தந்தையிடம் மினுவாங்கொடை நீதவான் வினவியபோது அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, சேயாவின் தந்தையை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்