வில்பத்து காடழிப்பு தொடர்பிலான மேன்முறையீட்டு மனு இன்று பரிசீலிக்கப்பட்டது

வில்பத்து காடழிப்பு தொடர்பிலான மேன்முறையீட்டு மனு இன்று பரிசீலிக்கப்பட்டது

வில்பத்து காடழிப்பு தொடர்பிலான மேன்முறையீட்டு மனு இன்று பரிசீலிக்கப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

07 Oct, 2015 | 10:02 pm

வில்பத்து தேசிய சரணாலயத்தை அண்மித்த 300 ஏக்கர் காடு அழிக்கப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்டதால் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் விஜித் மலல்கொட மற்றும் நீதிபதி எச்.சி.ஜே.மடவல ஆகியோர் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே குறித்த பகுதியில் மக்களைக் குடியேற்றும் பணிகள் நிறைவுபெற்றுள்ளதால் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதால் பயனில்லை என சட்ட மாஅதிபர் சார்பில் ஆஜரான அரச தரப்பு சட்டத்தரணி இதன்போது தெரிவித்துள்ளார்.

காடழிப்பு காரணமாக சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாலும் சட்டத்திற்கு அமைவாக குடியமர்த்தும் பணிகள் இடம்பெறாததாலும் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என மனுதாரர்கள் சார்பில் வாதிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, மனு தொடர்பிலான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிக்கு அறிவித்துள்ளது.

மனு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்