வடக்கு மார்க்கத்திற்கான ரயில் போக்குவரத்து வழமைக்கு

வடக்கு மார்க்கத்திற்கான ரயில் போக்குவரத்து வழமைக்கு

வடக்கு மார்க்கத்திற்கான ரயில் போக்குவரத்து வழமைக்கு

எழுத்தாளர் Staff Writer

07 Oct, 2015 | 7:19 am

ரயில் தடம்புரள்வினால் தடைப்பட்டிருந்த வடக்கு மார்க்கத்திற்கான ரயில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளது.

தலைமன்னாரில் இருந்து கொழும்பு கோட்டை வரையான போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த ரயில், கல்கமுவ மற்றும் அம்பன்பொல பகுதிகளுக்கு இடையே நேற்று மாலை தடம்புரண்டதால் வடக்கு மார்க்கத்திற்கான ரயில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து நேற்றிரவு தடம்புரண்ட ரயிலின் இரண்டு பெட்டிகளும் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டு, சேதமடைந்த ரயில் பாதையை மறுசீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

காங்கேசன்துறை நோக்கி நகர்சேர் கடுகதி ரயில் இன்று காலை 5.45 க்கு வழமைபோன்று புறப்பட்டுச் சென்றதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் தலைமன்னார் நோக்கி கொழும்பு கோட்டையிலிருந்து நேற்றிரவு புறப்படவிருந்த இரவுநேர தபால் ரயில்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்