யாழில் ”சிறுவர்களுக்காக” விழிப்புணர்வுத் திட்டத்தின் மூன்றாம் நாள்

யாழில் ”சிறுவர்களுக்காக” விழிப்புணர்வுத் திட்டத்தின் மூன்றாம் நாள்

எழுத்தாளர் Bella Dalima

07 Oct, 2015 | 9:02 pm

சிறுவர்களின் எதிர்கால பாதுகாப்பிற்காக நியூஸ்பெஸ்ட்டும், சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சும் இணைந்து முன்னெடுக்கும் “சிறுவர்களுக்காக” எனும் விழிப்புணர்வுத் திட்டத்தின் மூன்றாம் நாள் இன்றாகும்.

பிள்ளைகளின் பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு நாட்டு மக்களைத் தெளிவுபடுத்தும் இந்தத் திட்டம் கடந்த 5ஆம் திகதி வடக்கிலும் தெற்கிலும் ஆரம்பமானது.

வடக்கில் பயணத்தை ஆரம்பித்த எமது குழுவினர் இன்று யாழ். மாவட்டத்தில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தலைமையில் மாவட்ட செயலகத்தில் மூன்றாம் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இதன் பின்னர் யாழ்ப்பாணம் – நகர் பகுதியில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

பிரதான பஸ் தரிப்பிடம் உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளிலும் மக்களை விழிப்புணர்வூட்டும் திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், அதற்கு மாவட்ட செயலக அதிகாரிகளும், யாழ்ப்பாண பொலிஸாரும் ஒத்துழைப்பு நல்கினர்.

அதன் பின்னர் யாழ்ப்பாணம் கொட்டடி பிரதேசத்திலுள்ள மக்களும் தெளிவுபடுத்தப்பட்டனர்.

இன்று பிற்பகல் குருநகர் மற்றும் சாவகச்சேரியில் எமது குழுவினர் ”சிறுவர்களுக்காக” எனும் விழிப்புணர்வுத் திட்டத்தை முன்னெடுத்தனர்.

தெற்கில் பயணத்தை ஆரம்பித்த எமது மற்றைய குழுவினர் இன்று ஹம்பாந்தோட்டையில் விழிப்புணர்வுத் திட்டத்தை முன்னெடுத்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்