மைக்ரோசொப்ட் நிறுவனத்தின்  ”Surface Book” அறிமுகம்

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ”Surface Book” அறிமுகம்

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ”Surface Book” அறிமுகம்

எழுத்தாளர் Staff Writer

07 Oct, 2015 | 11:54 am

அப்பிள் நிறுவனத்தின் ”Mac Book” லப்டொப்களுக்கு போட்டியாக ”Surface Book” என்ற நவீனவகை லப்டொப்பை மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அண்மையில், விண்டோஸ் 10 இயங்குதளத்தை வெளியிட்டிருந்த மைக்ரோசொப்ட் நிறுவனம் தற்போது முதன்முறையாக லப்டொப்பை வெளியிட்டுள்ளது. மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இந்தியாவின் சத்ய நடெல்லா பதவியேற்ற பிறகு அந்நிறுவனத்தில் பல மாற்றங்களை செய்து வருகிறார்.

குறிப்பாக, ஸ்மார்ட்போனில் கூகுளின் அன்ட்ரொய்ட் ஆதிக்கம் செய்துவரும் நிலையில், அதற்கு போட்டியாக விண்டோஸ் இயங்குதளத்தை கொண்டுவர தீவிர முயற்சியில் மைக்ரோசொப்ட் களம் இறங்கியுள்ளது. அப்பிளின் மக் புக்கிற்கு போட்டியாக மைக்ரோசொப்ட்டின் இந்த புதிய லப்டொப் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது. கணினிகளின் வளர்ச்சியில் இந்த லப்டொப் புதிய அத்தியாயமாக இருக்கும் என கணினி வல்லுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.

”Surface Book” என்ற இந்த லப்டொப் 13.5 இன்ச் திரைரயக் கொண்டதாகும். 267 பி.பி.ஐ. அளவுக்கு மிகத்துல்லியமான பிக்சர் டென்சிட்டி கொண்டதாகவும், சில்வர் உலோகத்தாலும் இந்த லப்டொப் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இண்டெல் ஐ.5, ஐ.7 ப்ரொசசர்களுடன் வெளிவரும் இந்த லப்டொப், நல்ல கிரபிக்ஸ் திறனுடன் இயங்கும் வகையிலும், டச் ஸ்கிரீனுடனும் உள்ளது. இரண்டு யூ.எஸ்.பி. போர்ட்டுகளும், அனைத்துவகை மெமரி கார்டுகளையும் போடுவதற்கு பிரத்யேகமாக இடமும் தரப்பட்டுள்ளன. 700 கிராம் மட்டுமே எடை கொண்ட இந்த லப்டொப், ஸ்கிரீனை கீபோர்டிலிருந்து தனியாக பிரித்து எடுத்துவிட்டு, டப்லட் போலவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 12 மணிநேரம் வரை இயங்கும் பட்டரி திறன் இந்த ”Surface Book” லப்டொப், அப்பிள் ”Mac Book” ஐ விட இரண்டு மடங்கு வேகத்தில் இயங்கும் திறன் வாய்ந்தது என மைக்ரோசொப்ட் தெரிவித்துள்ளது. வரும் 26 ஆம் திகதி முதல் விற்பனைக்கு வரும் இந்த லப்டொப்பின் ஆரம்ப விலை 1499 டொலர்கள் (இலங்கை மதிப்பில் ரூ.210,000) ஆகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்