புலமைப்பரிசில் பெறுபேறுகள்: கொழும்பில் முதல் மூன்று இடங்களில் பம்பலப்பிட்டி இந்து கல்லூரி மாணவர்கள்

புலமைப்பரிசில் பெறுபேறுகள்: கொழும்பில் முதல் மூன்று இடங்களில் பம்பலப்பிட்டி இந்து கல்லூரி மாணவர்கள்

புலமைப்பரிசில் பெறுபேறுகள்: கொழும்பில் முதல் மூன்று இடங்களில் பம்பலப்பிட்டி இந்து கல்லூரி மாணவர்கள்

எழுத்தாளர் Bella Dalima

07 Oct, 2015 | 3:11 pm

புலமைப்பரிசில் பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் கொழும்பு மாவட்ட பெறுபேறுகளின் பிரகாரம் பம்பலப்பிட்டி இந்து கல்லூரி மாணவர்கள் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்திற்கான 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் தமிழ் மொழிமூலம் முதல் 10 இடங்களில் 188 புள்ளிகளைப் பெற்று மோஹனேஸ்வரன் அபிராம் முதலிடத்தில் உள்ளதாக பாடசாலை அதிபர் ஐயம்பிள்ளை ராஜரட்ணம் தெரிவித்தார்.

அத்துடன், 186 புள்ளிகளைப் பெற்றுள்ள சக்திவேல் சமேந்திரா மற்றும் வசந்தன் கீர்த்திக் ஆகிய இருவரும் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

இதுதவிர, பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் மேலும் 4 மாணவர்களும் இம்முறை 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பெறுபேறுகளின் பிரகாரம் கொழும்பு மாவட்டத்தின் முதல் பத்து இடங்களுக்குள் வந்துள்ளதாக பாடசாலை அதிபர் கூறினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்