புலமைப்பரிசில் பரீட்சை: தமிழ் மொழி மூலம் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றோர் விபரம்

புலமைப்பரிசில் பரீட்சை: தமிழ் மொழி மூலம் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றோர் விபரம்

எழுத்தாளர் Bella Dalima

07 Oct, 2015 | 9:13 pm

தமிழ் மொழி மூலம் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய சில மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்து தமது மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை தேடித்தந்துள்ளனர்.

யாழ். புனித பொஸ்கோ பாடசாலையின் சோதிநாதன் வசீகரன் 192 புள்ளிகளை இம்முறை புலமைப்பரிசிலில் பெற்றுள்ளார்.

அம்பாறை – கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியின் மதுரா கிருஷ்ணசைதன்னியன் 189 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

கொழும்பு மாவட்டத்திற்கான 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் மோஹனேஸ்வரன் அபிராம் 188 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

இவர் கொழும்பு இந்துக்கல்லூரி மாணவர் என்பதுடன் இதே பாடசாலையைச் சேர்ந்த சக்திவேல் சமேந்திரா மற்றும் வசந்தன் கீர்த்திக் ஆகிய இருவரும் 186 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் 184 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவன் நித்தியகுமார் சயனுதன் மற்றும் ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி தனுக்சனா சிவா ஆகியோரே அதிகப் புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்