தெற்கு அதிவேக வீதியின் இமதூவ – கொக்மாதூவ பகுதிகளிடையே முன்னெச்சரிக்கை சமிக்ஞை கட்டமைப்பு

தெற்கு அதிவேக வீதியின் இமதூவ – கொக்மாதூவ பகுதிகளிடையே முன்னெச்சரிக்கை சமிக்ஞை கட்டமைப்பு

தெற்கு அதிவேக வீதியின் இமதூவ – கொக்மாதூவ பகுதிகளிடையே முன்னெச்சரிக்கை சமிக்ஞை கட்டமைப்பு

எழுத்தாளர் Staff Writer

07 Oct, 2015 | 7:26 am

தெற்கு அதிவேக வீதியின் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ள இமதூவ – கொக்மாதூவ பகுதிகளிடையே முன்னெச்சரிக்கை சமிக்ஞை கட்டமைப்பை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்துடன் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிவேக வீதி நடவடிக்கை மற்றும் மேற்பார்வை பிரிவின் பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க குறிப்பிடுகின்றார்.

இமதூவ – கொக்மாதூவ பகுதியில் 114 ஆவது கிலோமீற்றர் பகுதியில் அண்மையில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாயம் நிலவியிருந்தது.

மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ள பகுதியில் நிரம்பியுள்ள வௌ்ள நீரை அகற்றும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அதிவேக வீதி நடவடிக்கை மற்றும் மேற்பார்வை பிரிவின் பணிப்பாளர் கூறினார்.

அடுத்த ஓரிரு நாட்களில் வௌ்ள நீரை அகற்றி, அந்த பகுதியில் நிலவியுள்ள மண்சரிவு அபாய நிலைமையை சீர் செய்வததுடன், வாகனப் போக்குவரத்தையும் வழமைக்குக் கொண்டுவர எதிர்ப்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்