களனி ஆறு மாசடைதல் தொடர்பான ஆய்வு நடவடிக்கைகள் நிறைவு

களனி ஆறு மாசடைதல் தொடர்பான ஆய்வு நடவடிக்கைகள் நிறைவு

களனி ஆறு மாசடைதல் தொடர்பான ஆய்வு நடவடிக்கைகள் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

07 Oct, 2015 | 8:52 am

களனி ஆறு மாசடைதல் தொடர்பில் ஆராய்வதற்கான நியமிக்கப்பட்ட குழுவின் ஆய்வு நடவடிக்கைகள் நேற்று நிறைவடைந்துள்ளன.

இதற்கான விசாரணை அறிக்கை இநத வாரத்திற்குள் தன்னிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் லலித் தர்மசிறி குறிப்பிடுகின்றார்.

களனி ஆறு மாசடைவதை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால், ஆற்றின் இரு மருங்கிலும் அமைந்துள்ள தொழிற்சாலைகள் தொடர்பில் வெற்றிகரமான முறையில் ஆராயப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அறிக்கையை ஆராய்ந்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.

களனி ஆற்றில் கழிவுகள் சேர்வதை தடுப்பதற்கும், ஆற்றின் வளத்தை பராமறிப்பதற்குமான மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பொறுப்பை சரிவர நிறைவேற்றுவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்