‘ஐ.நா. சபை பாதுகாப்புப் பேரவையின் உறுப்புரிமையை விரிவாக்குவதற்கான காலம் கனிந்துள்ளது’

‘ஐ.நா. சபை பாதுகாப்புப் பேரவையின் உறுப்புரிமையை விரிவாக்குவதற்கான காலம் கனிந்துள்ளது’

எழுத்தாளர் Bella Dalima

07 Oct, 2015 | 8:57 pm

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஜப்பான் விஜயத்தின் இறுதி நாள் இன்றாகும்.

இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாவது;

[quote]இன்று இங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, இரு தரப்பு பிரவேசம் அன்றி பாராளுமன்றத்தினால் உறுதி செய்யப்பட்ட பிரகடனமாக மாற்றவுள்ளேன். பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கத்தின் பெறுமதியை வறிய நாடு என்ற வகையில் நாம் அறிவோம். அதேபோன்று கடல் வளம் தொடர்பில் எமக்கும் அழுத்தத்தைக் கொடுக்கக்கூடிய சர்வதேசக் கோட்பாடுகள் மற்றும் ஆலோசனைகளின் முக்கியத்துவம் தொடர்பிலும் நாம் அறிவோம். எழுச்சி பெற்றுவரும் ஆசியாவின் அதிகாரம் மற்றும் பொருளாதார அதிகாரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை அதன் பாதுகாப்புப் பேரவையின் உறுப்புரிமையை விரிவாக்குவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய காலம் கனிந்துள்ளதாகவும் இலங்கை கருதுகிறது.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்