இலங்கை பொலிஸ் பதவிக்கான நேர்முகத் தேர்வு இடம்பெறவுள்ளது

இலங்கை பொலிஸ் பதவிக்கான நேர்முகத் தேர்வு இடம்பெறவுள்ளது

இலங்கை பொலிஸ் பதவிக்கான நேர்முகத் தேர்வு இடம்பெறவுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

07 Oct, 2015 | 9:29 pm

இலங்கை பொலிஸ் பதவிக்கு தமிழ் இளைஞர், யுவதிகளை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் வாரங்களில் இடம்பெறவுள்ளதாக யாழ்.பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் W.K.ஜெயலத் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட இளைஞர், யுவதிகளுக்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் 10ஆம் திகதி யாழ். மத்திய கல்லூரியில் இடம்பெறவுள்ளதாகவும் வவுனியா மாவட்ட இளைஞர், யுவதிகளுக்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் 11 ஆம் திகதி வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்