இந்திய அணி தரவரிசைப் பட்டியலில் மேலும் பின்தள்ளப்படும் அபாயம்

இந்திய அணி தரவரிசைப் பட்டியலில் மேலும் பின்தள்ளப்படும் அபாயம்

இந்திய அணி தரவரிசைப் பட்டியலில் மேலும் பின்தள்ளப்படும் அபாயம்

எழுத்தாளர் Staff Writer

07 Oct, 2015 | 12:20 pm

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் போட்டிக்கு முன்பாக, 20 ஓவர் கிரிக்கெட் அணிகளின் தரவரிசையில் இந்திய அணி 4 ஆவது இடத்தில் இருந்தது.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் இரு ஆட்டங்களில் மண்ணை கவ்வியதன் மூலம் இந்திய அணி (110 புள்ளி) தரவரிசையில் 6 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

கடைசி ஆட்டத்திலும் தோற்றால் 8-வது இடத்திற்கு பின்தள்ளப்படும். அதே சமயம் தென்னாபிரிக்கா (115 புள்ளி) 6 ஆவது இடத்தில் இருந்து 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

உலக சம்பியன் இலங்கை (126 புள்ளி) முதல் இடத்திலும், பாகிஸ்தான் (121 புள்ளி) 2 ஆவது இடத்திலும், அவுஸ்திரேலியா (118 புள்ளி) 3 ஆவது இடமும், மேற்கிந்திய தீவுகள் (117 புள்ளி) 4 ஆவது இடத்திலும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்