ஆசியாவின் கறுப்புக்குதிரை ஜனாதிபதியால் கௌரவிப்பு

ஆசியாவின் கறுப்புக்குதிரை ஜனாதிபதியால் கௌரவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

07 Oct, 2015 | 8:52 pm

ஆசியாவின் கறுப்புக்குதிரை என வர்ணிக்கப்பட்ட சுசந்திகா ஜயசிங்க ஒலிம்பிக் பதக்கம் வென்று கடந்த 28 ஆம் திகதியுடன் 15 ஆண்டுகள் பூர்த்தியானது.

இதனை முன்னிட்டு சுசந்திகா ஜயசிங்கவைக் கௌரவிக்கும் வைபவமொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது.

கொழும்பு மன்றக் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் உட்பட மேலும் சிலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, சுசந்திகா ஜயசிங்கவின் இணையத்தளமும் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டதுடன் அவருக்கு நினைவுச்சின்னமும் பரிசளிக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்