நாங்கள் சரியாக விளையாடாதபோது இவ்வாறு நடப்பதுண்டு: போத்தல் வீச்சு பற்றி தோனி

நாங்கள் சரியாக விளையாடாதபோது இவ்வாறு நடப்பதுண்டு: போத்தல் வீச்சு பற்றி தோனி

நாங்கள் சரியாக விளையாடாதபோது இவ்வாறு நடப்பதுண்டு: போத்தல் வீச்சு பற்றி தோனி

எழுத்தாளர் Bella Dalima

06 Oct, 2015 | 4:52 pm

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக கட்டாக்கில் நடைபெற்ற T20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி படுமோசமாகத் தோல்வியடைந்ததையடுத்து, மைதானத்தில் இந்திய ரசிகர்கள் போத்தல்களை வீசியெறிந்தனர். இதனால் சுமார் 50 நிமிடங்கள் வரை ஆட்டம் தடைப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் தோனி கூறியதாவது;

[quote]வெளிப்படையாகக் கூற வேண்டுமெனில் வீரர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை. ரசிகர்கள் சிலர் வீசிய போத்தல்கள் எல்லைக் கோடு வரை வந்து வீழ்ந்தன. எனவே, வீரர்கள் மைதானத்தை விட்டுச் சென்று விடுவது சிறந்தது என நடுவர்கள் நினைத்தனர். ரசிகர்களின் இம்மாதிரியான செயற்பாடுகள், சரியாக விளையாடாத போது உருவாவதே. நாங்கள் சரியாக விளையாடவில்லை, எனவே இதுமாதிரியான செயல்கள் நடைபெறுகின்றன. முதல் போத்தல் தான் பிரச்சினை. அடுத்தடுத்து வீசப்பட்டவை விளையாட்டுக்காக, பொழுதுபோக்குக்காக வீசப்பட்டவை. அதில் நாம் கூர்ந்து பார்க்க எதுவுமில்லை.

விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் நாம் சுலபமாக வென்றோம், அப்போதும் கூட நிறைய போத்தல்கள் பறந்தன. எப்போதுமே முதல் போத்தல் வந்து விழுந்தால் போதும் தொடர்ந்து அது ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிடும். ஒருவர் செய்தால் அதனை மற்றவர்களும் பின்பற்றும் பொழுதுபோக்கு விவகாரமாகவே நான் இதனைப் பார்க்கிறேன், இதில் சீரியசாக எடுத்து கொள்ள எதுவுமில்லை. [/quote]

என்றார் தோனி.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்