தொழிலுக்காக குவைத் சென்ற 11 பெண்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்

தொழிலுக்காக குவைத் சென்ற 11 பெண்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்

தொழிலுக்காக குவைத் சென்ற 11 பெண்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2015 | 7:41 am

சுற்றுலா வீசாவை பயன்படுத்தி குவைத்தில் தொழிலுக்கு சென்ற 11 இலங்கை பெண்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

போலியான தவல்களை வழங்கி இவர்கள் குவைத்துக்கு சென்றிருந்ததாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இவர்களுக்கு 5 வயதுக்கும் குறைவான பிள்ளைகள் இருக்கின்றமையும் தெரியவந்துள்ளதாக பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொது முகாமையாளருமான மங்கள ரன்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

குவைத்து விமான நிலையத்தில் வைத்தே குறித்த இலங்கைப் பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

பணிப்பெண்களாக வெளிநாடு செல்வோருக்கான விதிமுறைகளை மீறுவோர் எதிர்காலத்திலும் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்