சேயா சதெவ்மி கொலை: கொண்டயாவின் மூத்த சகோதரனை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை

சேயா சதெவ்மி கொலை: கொண்டயாவின் மூத்த சகோதரனை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2015 | 12:14 pm

சேயா சதெவ்மியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கொண்டயாவின் மூத்த சகோதரன் சமன் ஜயலத், இன்று (06) மரபணு பரிசோதனைக்கு தேவையான இரத்த மாதிரிகளை பெறுவதற்காக ஜின்டெக் நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (05) மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

இதன் போது சுமார் 2 மணித்தியாலம் சந்தேகநபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்