சீனாவில் மின்மினிப் பூச்சி பூங்கா: இரவில் ஔிரும் ரம்மியமான காட்சியைக் கண்டு மகிழும் மக்கள் (Photos)

சீனாவில் மின்மினிப் பூச்சி பூங்கா: இரவில் ஔிரும் ரம்மியமான காட்சியைக் கண்டு மகிழும் மக்கள் (Photos)

சீனாவில் மின்மினிப் பூச்சி பூங்கா: இரவில் ஔிரும் ரம்மியமான காட்சியைக் கண்டு மகிழும் மக்கள் (Photos)

எழுத்தாளர் Bella Dalima

06 Oct, 2015 | 3:36 pm

சீனாவில் மின்மினிப் பூச்சி பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

மத்திய சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் திறக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் இரவு நேரங்களில் பல்லாயிரக்கணக்கான மின்மினிப் பூச்சிகள் ஒளியை உமிழும் ரம்மியமான காட்சியை பலர் கண்டு இரசித்து வருகின்றனர்.

பார்வையாளர்கள் இங்குள்ள மின்மினிகளை விலைக்கு வாங்கி, கொண்டுசெல்லவும் முடியும். இங்கு உற்பத்தியாகும் மின்மினிப் பூச்சிகள் ஒரு ஜாடியில் அடைத்து, பல்வேறு இடங்களுக்கும் ஒன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த மே மாதம் இந்த பூங்கா திறக்கப்பட்டதில் இருந்து அன்றாடம் சராசரியாக 5000 பார்வையாளர்கள் இங்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர்.

பல்லாயிரம் மின்மினிகளின் ஒளிமிக்க கண்சிமிட்டலில் உள்ளங்களை பறிகொடுத்தவர்களாக பரவசத்துடன் அவர்கள் மகிழ்கின்றனர்.

ஆண்டுதோறும் மே மாதத்தில் இருந்து ஒக்டோபர் மாதம் வரை இந்த மின்மினிப் பூங்கா செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1_Ozarks_Ropeswing 4  ac0a9cae-e086-4652-8a95-a95718444179-2060x1236 Fire1 Fire4  istock_000067918371_small

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்