“எமது சிறுவர்களுக்காக” : முல்லைத்தீவில் விழிப்புணர்வு நடவடிக்கை

“எமது சிறுவர்களுக்காக” : முல்லைத்தீவில் விழிப்புணர்வு நடவடிக்கை

எழுத்தாளர் Bella Dalima

06 Oct, 2015 | 9:52 pm

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நியூஸ்பெஸ்ட்டும் சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சும் இணைந்து முன்னெடுக்கும் “எமது சிறுவர்களுக்காக” எனும் விழிப்புணர்வுத் திட்டத்தின் இரண்டாவது நாள் இன்றாகும்.

தென் மாகாணத்தில் ஆரம்பமான விழிப்புணர்வுத் திட்டத்தின் இரண்டாம் நாள் பயணம் தெய்வேந்திரமுனை நகரில் இன்று காலை ஆரம்பமானது.

எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்பிற்காக நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளையும் தெளிவுபடுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இதற்கமைய, பொலிஸாரின் ஒத்துழைப்போடு இன்று முற்பகல் தெய்வெந்திரமுனை நகரில் கையேடுகள் விநியோகிக்கப்பட்டன.

தென் மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்ற விழிப்புணர்வுத் திட்டத்தின் இரண்டாவது கட்டம் மாத்தறை நகரில் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, கிளிநொச்சியில் இருந்து பயணத்தை ஆரம்பித்த எமது இரண்டாவது குழுவினர் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இன்று காலை புதுக்குடியிருப்பு பகுதியில் மக்களுக்கான விழிப்புணர்வு கையேடுகள் விநியோகிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து தண்நீரூற்று பகுதியிலும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

முல்லைத்தீவு நகரில் இன்று முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வுத் திட்டத்திலும் மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு கலந்துகொண்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்