இலங்கை மற்றும் ஜப்பான் பிரதமர்களிடையே இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை

இலங்கை மற்றும் ஜப்பான் பிரதமர்களிடையே இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை

எழுத்தாளர் Bella Dalima

06 Oct, 2015 | 3:58 pm

ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் மூன்றாம் நாளான இன்று அந்த நாட்டு பிரதமர் ஷின்சோ அபேயை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இரண்டாவது சுற்றாகவும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, இலங்கையில் முதலீட்டு ஊக்குவிப்பு, தேசிய அபிவிருத்தி மற்றும் சமாதானத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஜப்பான் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, ஜப்பான் மற்றும் இலங்கைப் பிரதமர்களுக்கு இடையில் இன்று முற்பகல் இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து இரு தரப்பு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டதாக டோக்கியோ நகரில் இருக்கும் எமது அலுவலக செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்