இலங்கையில் முதலீடு செய்யுமாறு ஜப்பான் வர்த்தகர்களுக்கு பிரதமர் அழைப்பு

இலங்கையில் முதலீடு செய்யுமாறு ஜப்பான் வர்த்தகர்களுக்கு பிரதமர் அழைப்பு

இலங்கையில் முதலீடு செய்யுமாறு ஜப்பான் வர்த்தகர்களுக்கு பிரதமர் அழைப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Oct, 2015 | 1:51 pm

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் போர்மியோ குஷிடாவை இன்று சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளார்.

மனித உரிமை பேரவையின் பிரேரணைக்கு அமைய, உள்நாட்டு பொறிமுறையை முன்னெடுப்பதற்கு தமது நாடு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கும் என ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் சர்வதேச மட்டத்தில் இலங்கையின் நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைப்பதற்காக புதிய அரசாங்கம் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு தமது வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிய வலயத்தில் சமாதானத்தையும், அபிவிருத்தியையும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ஜப்பானின் பங்களிப்பு அவசியம் என்பதனை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு பேரவையில் ஆசனமொன்றை பெற்றுக் கொள்வதற்கு ஜப்பானிற்கு முழுமையான ஒத்துழைப்புக்களை இலங்கை வழங்கும் என பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து டோக்கியோ நகரில் ஜப்பானிலுள்ள வர்த்தக சமூகத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாக இதன்போது கருத்துக்கள் பறிமாறப்பட்டதாக எமது விசேட பிரதிநிதி குறிப்பிட்டார்.

இருதரப்பு ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு வர்த்தக சமூகத்தின் தலைவர் கூறியுள்ளார்.

இலங்கையின் எதிர்கால அரசியல் மற்றும் முதலீட்டுக்கான வாய்ப்புக்கள் தொடர்பிலும் பிரதமர், அந்த நாட்டு வர்த்தக சமூகத்திற்கு தெளிவூட்டினார்.

மேலும் இலங்கையில் முதலீடு செய்யுமாறு ஜப்பான் வர்த்தகர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜப்பான் லிபரல் டேமோகிரஸ் கட்சியின் தலைவரை இன்று பிற்பகல் சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தினார்.

அதனைத் தொடர்ந்து ஜப்பான் மகா சங்கத்தினரையும் பிரதமர் சந்தித்து ஆசிப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஜப்பான் விஹாரையின் விஹாராதிபதி பானகல உபதிஸ்ஸ தேரர் உள்ளிட்டோர் இந்த சந்தர்ப்பத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

மேலும் ஜப்பானிலுள்ள இலங்கையர்களை சந்தித்த பிரதமர், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துக் கொண்டார்.

பிரதமரின் இந்த விஜயத்தில் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்