உலகக் கிண்ண றக்பி தொடரின் காலிறுதிக்கு வேல்ஸ் அணி தகுதி

உலகக் கிண்ண றக்பி தொடரின் காலிறுதிக்கு வேல்ஸ் அணி தகுதி

உலகக் கிண்ண றக்பி தொடரின் காலிறுதிக்கு வேல்ஸ் அணி தகுதி

எழுத்தாளர் Staff Writer

02 Oct, 2015 | 9:32 am

உலகக் கிண்ண றக்பி தொடரில் முதல் அணியாக வேல்ஸ் அணி காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றது.

பிஜி அணிக்கு எதிராக சில நிமிடங்களுக்கு முன்னர் முடிவுக்குவந்த போட்டியில் 23 – 13 எனும் புள்ளிகள் கணக்கில் வேல்ஸ் அணி வெற்றிவாகை சூடியது.

உலகக் கிண்ண றக்பி தொடரில் ஏ குழுவுக்கான இந்தப் போட்டி கார்டிப் மிலேனியம் மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியில் 7 ஆவது நிமிடத்தில் ட்ரையைப் பூர்த்தி செய்த வேல்ஸ் அணி புள்ளிகள் பெறுவதனை ஆரம்பித்து வைத்தது.

14 ஆவது நிமிடத்தில் பெனால்டியின் மூலம் பிஜி 3 புள்ளிகளைப் பெற்றது.

21 ஆவது நிமிடத்தில் பெனால்டியை பெற்ற வேல்ஸ் 10 புள்ளிகளுடன் முன்னிலை வகித்தது.

தொடர்ந்து 32 ஆவது நிமிடத்தில் மற்றொரு ட்ரையை எட்டிய வேல்ஸ் அணி முதல் பகுதியில் 17 – 6 எனும் புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்