சேயா கொலையின் முதலிரண்டு சந்தேகநபர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

சேயா கொலையின் முதலிரண்டு சந்தேகநபர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

01 Oct, 2015 | 11:04 am

கொட்டதெனியாவ சிறுமி சேயா சதெவ்மியின் கொலை தொடர்பில் முதலில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களான மாணவன் மற்றும் ஒரு பிள்ளையின் தந்தை ஆகியோர் இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு அமையவே குறித்த இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சேயா சதெவ்மியின் சடலத்தில் இருந்து பெறப்பட்ட தடயங்களின் மரபணுக்களுடன் குறித்த இரண்டு சந்தேகநபர்களினது மரபணுக்கள் எந்த வகையிலும் பொருந்தவில்லை என ஜின் டெக் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதாக மினுவாங்கொடை நீதவான் இன்று அறிவித்திருந்தார்.

மரபணுக்கள் பெருந்தாவிட்டால் சந்தேகநபர்களுக்கு எதிராக வேறு சாட்சிகளும் இல்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தல் சுட்டிக்காட்டினர்.

இதற்கமைய 17 வயது மாணவன் மற்றும் ஒரு பிள்ளையின் தந்தை ஆகிய இருவரையும் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்