வலுப்பெற்றுவரும்  வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களின் போராட்டம் 

வலுப்பெற்றுவரும்  வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களின் போராட்டம் 

எழுத்தாளர் Bella Dalima

01 Oct, 2015 | 9:29 pm

வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களின் போராட்டம் மேலும் வலுப்பெற்றுள்ளது.

கடந்த மாதம் 18 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்திற்கு இதுவரையில் எவ்வித தீர்வும் வழங்கப்படாத நிலையில், ஆலை ஊழியர்கள் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த நான்கு மாத சம்பளமும், 30 வீத நிலுவையும் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடதாசி ஆலை ஊழியர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்றும் ஊழியர்கள் கடதாசி ஆலைக் கட்டடத்தின் கூரை மீது ஏறி தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

தமது பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுத்தராதவிடத்து போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக ஊழியர்கள் குறிப்பிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்